முஸ்லிம் மத்­திய கிழக்கை சீர்­கு­லைக்கும் நோக்கில் பலஸ்­தீன நிலங்­களில் அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்­பாவால் ஸ்தாபிக்­கப்­பட்ட பாசிச குடி­யேற்ற கால­னித்­துவ கொலை­கார இயந்­தி­ர­மான இஸ்ரேல், 2025 செப்­டம்பர் 9 ஆம் திகதி பிராந்­தி­யத்தில் மிகப்­பெ­ரிய அமெ­ரிக்க இரா­ணுவத் தளத்தைக் கட்டிக் காத்து, விருந்து படைக்கும் கட்டார் நாட்டின் மீது தாக்­குதல் நடத்தி உள்­ளது.

இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக போர் தொடுத்து, இது­வரை அமெ­ரிக்க வரி செலுத்­துவோர் பணத்தில் 22 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை பலஸ்­தீ­னர்­களை படு­கொலை செய்­வ­தற்கும் காஸாவில் தங்கள் சுக போகத்­துக்­கான மத்­திய கிழக்கின் உல்­லாச புரியை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக காஸாவை அழிப்­ப­தற்கும் செல­விட்­டுள்ளார்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப். கட்டார் மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தலை அவர் ஆசீர்­வ­தித்­துள்ளார். இது ஹமாஸின் மூத்த அதி­கா­ரி­களை குறி­வைத்து நடத்­தப்­பட்­டது என அமெ­ரிக்க மற்றும் பிராந்­திய உயர் அதி­கா­ரிகள் ‘மிட்ல் ஈஸ்ட் ஐ’ இணை­யத்­துக்கு தெரி­வித்­துள்­ளனர்.

இந்த செயற்­பா­டு­ மு­ரண்­பாட்டை மேலும் ஆழ­மாக்­கு­கின்­றது. டோஹாவில் குண்டு வீசி கொல்­லப்­பட்­ட­வர்கள் ஹமாஸ் போரா­ளிகள் அல்லர்.

அவர்கள் சமா­தான பேச்­சு­வார்த்­தை­யா­ளர்கள். இந்தப் பேச்­சு­வார்த்­தைக்கு இட­ம­ளிக்­கு­மாறு கட்டாரை வொஷிங்டன் கேட்­டுக்­கொண்­டதன் விளை­வாக அங்கு வந்த பிர­தி­நி­திகள். கட்­டாரின் விருந்­தா­ளிகள். எவ்­வா­றா­யினும் அதிர்ஷ்­ட­வ­ச­மாக இந்தத் தாக்­கு­தலில் இருந்து ஹமாஸ் அதி­கா­ரி­க­ளான கலீல் அல்-­ஹய்யா காலித், மெஷால் ஜாஹெர் ஜபரின் மற்றும் பிற மூத்த அதி­கா­ரிகள் பலர் உயிர் தப்பி உள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஹமாஸ் அதி­கா­ரி­களில் ஹாயாவின் மகன் ஹம்மம் அல்-­ஹய்யா மற்றும் அவரின் அலு­வ­லக இயக்­குனர் ஜிஹாத் லுபாபாத் ஆகியோர் இந் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­டனர் என்று ஹமாஸ் வட்­டா­ரங்கள் மிட்ல் ஈஸ்ட் ஐ க்கு தெரி­வித்­தன. மேலும் பலர் காய­ம­டைந்தும் உள்­ளனர்.

இந்த தாக்­குதல் அதிர்ச்­சி­ அ­ளிப்­ப­தாக உள்­ளது. காரணம், சில மாதங்­க­ளுக்கு முன்­புதான் கட்டார், ட்ரம்பை வர­வேற்க சிவப்பு கம்­ப­ளத்தை உருட்­டி­யது.

காஸாவில் இனப்­படு­கொ­லைக்கு முழு­மை­யாக ஆத­ர­வ­ளிக்கும் அமெ­ரிக்­காவில் 1.3 ட்ரில்­லியன் டொலர்­களை முத­லீடு செய்­வ­தாக உறு­தியும் அளித்­தது. கட்டார் அரச குடும்பம் ஜனா­தி­பதி ட்ரம்­பிற்கு 400 மில்­லியன் டொலர்­கள்­பெ­று­மதி கொண்ட ஆடம்­பர விமானம் ஒன்­றையும் பரி­சாக வழங்­கி­யது. இது வொஷிங்­ட­னு­ட­னான அதன் மூலோ­பாய உற­வு­களின் ஆழத்தை கோடிட்டுக் காட்­டு­கி­றது.

கட்டார் மீதான தாக்­கு­தலை நடத்த எட்டு இஸ்­ரே­லிய எவ்-15 போர் விமா­னங்கள் மற்றும் நான்கு எவ்-35 விமா­னங்கள் ஜோர்தான் மற்றும் சவூதி அரே­பி­யாவின் வான்­வெளி மீது பறந்­த­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இருப்­பினும், எதிர்­பார்த்­த­படி இரு நாடு­களும் இந்த அறிக்­கை­களை மறுத்­துள்­ளன.

அரே­பி­யர்கள் மற்றும் பலஸ்­தீ­னர்கள் இல்­லாத, நதி முதல் கடல் வரை­யான முழு நிலப்­ப­ரப்பும் தங்­க­ளு­டை­ய­தாக இருக்க வேண்டும். அதுவே இஸ்ரேல் விரும்பும் அமைதி என்று கட்­டு­ரை­யாளர் ஜியாத் மோட்­டாலா கூறி உள்ளார்.

இருப்­பினும் இஸ்ரேல் போதித்த இந்த கூர்­மை­யான பாடம் கட்­டா­ருக்கு மட்டும் உரி­யது அல்ல. இது ரியாத் மற்றும் அபு­தா­பிக்கும் பொருந்தும்.

அந்த நாடு­களின் ஆட்­சி­யா­ளர்கள் சர்­வ­தேச அர­சி­யலில் மிகவும் அவ­மா­ன­க­ர­மான ஒரு போக்கைத் தேர்ந்­தெ­டுத்­துள்­ளனர். ஓர் இன­வெறி ஆட்­சி­யுடன் ஒத்­து­ழைக்கும் அதே நேரத்தில் தங்­களை அரசுத் தலை­வர்கள் என்றும் அவர்­களே பாராட்டிக் கொள்­கின்­றனர்.

கட்­டாரின் ஓர் இடத்தின் மீது குண்­டு­வீசு­வது என்­பது அங்­குள்ள ஒவ்­வொரு அரண்­ம­னை­யையும், ஒவ்­வொரு அமைச்­ச­கத்­தையும், அரபு உலகின் ஒவ்­வொரு தெரு­வையும் உலுக்கும் ஓர் இடி என்று கட்­டு­ரை­யாளர் சவு­மயா கன்­னோஷி தெரி­வித்­துள்ளார்.

எந்­த­வொரு அரபு தலை­ந­க­ரமும் பாது­காப்­பா­னது அல்ல என்­பதே இதன் அர்த்தம். இஸ்ரேல் ஒரு கையால் அரபு பணத்தை கைப்­பற்றி, மற்ற கையால் அரபு மண்ணை எரிக்­கி­றது.

‘அவர்­களின் செல்­வத்தை சூறை­யா­டுங்கள். அதே­நேரம் உங்கள் போர் விமா­னங்­களை அவர்கள் மீது கட்­ட­விழ்த்து விடுங்­கள்.’ -­அ­துதான் அமெ­ரிக்கா இஸ்­ரே­லுக்கு வழங்­கி­யுள்ள புதிய ஒழுங்கு.

கடந்த சில வாரங்­களில் மட்டும் காஸா, மேற்குக் கரை, சிரியா, லெபனான், யேமன் மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் குண்­டு­களை வீசி­யுள்­ளது. கடந்த ஆண்டும் அது ஈராக் மீது குண்டு வீசி­யது.

கடந்த இரண்டு நாட்­களில் துனி­சி­யாவில் உள்ள ஸ்முத் ஃப்ளோட்­டி­லாவின் இரண்டு கப்­பல்­களை அது தாக்­கி­யது. இஸ்ரேல் ஒரு புதிய ஒழுங்கை நிறு­வு­கி­றது.

ஒவ்­வொரு அரபு நிலமும், நீர் பரப்பும் மற்றும் வான் வெளியும் அது விரும்­பிய நேரத்தில் புகுந்து விளை­யாடும் விளை­யாட்டு மைதானம். இங்கு சர்­வ­தேச சட்டம் என்­பது வெறும் சாம்பல் மேடு. இங்கு நிலைத்­துள்ள ஒரே சட்டம் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான சக்தி மட்­டுமே. இதுவே அமெ­ரிக்­க-­இஸ்ரேல் புதிய ஒழுங்கு.

தண்­ட­னை­யி­லி­ருந்து விடு­பாட்­டு­ரிமை பெறும் கோட்­பாடு இன்­னமும் மேம்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆனால், 1982 ஆம் ஆண்டின் ‘யினான் திட்டம்’ இன்­னமும் பின்­பற்­றப்­ப­டு­கின்­றது. இந்தத் திட்டம் அரபு நாடு­களை சிறு சிறு குழுக்­க­ளா­கவும் பகு­தி­க­ளா­கவும் பிரிக்க அழைப்பு விடுக்­கின்­றது.

ஈராக்கை சுன்னி, ஷியா மற்றும் குர்திஷ் பிரி­வு­க­ளாகப் பிரிப்­பது; சிரி­யாவை அல­விய்யா, ட்ரூஸ் மற்றும் சுன்னி நிலப்­பி­ர­புக்­க­ளாகப் பிரிப்­பது; எகிப்தை சினாய் பகு­தியை மீண்டும் ஆக்­கி­ர­மிக்­கக்­கூ­டிய அள­விற்கு பல­வீ­ன­ம­டைய வைப்­பது;

பலஸ்­தீ­னர்ளை ஜோர்டான் ஆற்றின் குறுக்கே இடம்­பெ­யர வைப்­பது. இது தான் 1982இல் யூத ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரால் முன்­வைக்­கப்­பட்ட ‘யினான் திட்டம்’ என அழைக்­கப்­படும் அகண்ட இஸ்­ரேலின் உரு­வாக்­கத்­துக்­கான அடிப்டைத் திட்­ட­மாகும்.

அண்­மையில் ஒரு நேர்­கா­ணலில், இஸ்­ரே­லிய அர­சி­யல்­வாதி அவி லிப்கின், இஸ்­ரேலின் எல்­லைகள் “லெப­னானில் இருந்து சவூதி அரே­பியா வரை” விரி­வ­டையும் என்று கணித்­துள்ளார். அதை அவர் “பெரிய பாலை­வனம்” என்றும், “மத்­தி­ய­தரைக் கடலில் இருந்து யூப்­ரடீஸ் வரை இருக்கும்” என்றும் வர்­ணித்­துள்ளார்.

Yinon Plan

அவர் மேலும் கூறு­கின்றார் “யூப்­ர­டீஸின் மறு­பு­றத்தில் யார் இருக்­கின்­றார்கள்? குர்­திஷ்கள். அவர்­களும் எமது நண்­பர்­களே. எனவே,எங்­க­ளுக்கு பின்னால் மத்­தி­ய­தரைக் கடலும், எங்­க­ளுக்கு முன்னால் குர்­திஷ்­களும் உள்­ளனர்.

லெபனான், உண்­மையில் இஸ்­ரேலின் பாது­காப்­புக்­கான ஒரு குடை. அதை பின்னர் நாங்கள் எடுத்துக் கொள்வோம். நாங்கள் மக்கா, மதீனா மற்றும் சினாய் மலை­களைக் கைப்­பற்றி அந்த இடங்­க­ளையும் தூய்­மைப்­ப­டுத்தப் போகிறோம் என்று நான் நம்­பு­கிறேன்”.

சியோ­னிச எழுத்­தா­ளர்கள் மக்கா மற்றும் மதீனா வரை பர­வி­யுள்ள இஸ்­ரேலின் எல்­லை­களைப் பற்றி வெளிப்­ப­டை­யாக கற்­பனை செய்­கின்­றார்கள். மேலும் ‘மக்­கா­வுக்குத் திரும்பு’ போன்ற புத்­த­கங்கள் மற்றும் வெற்­றிக்­கான விவி­லிய வரை­ப­டங்­க­ளையும் அவர்கள் வடி­வ­மைத்­துள்­ளனர்.

அவர்­களின் இறுதி இலக்கு எப்­போதும் தெளி­வா­கவே இருக்­கின்­றது. அரபு சக்­தி­களை துண்டு துண்­டு­க­ளாகக் கலைப்­பது தான் அந்த இறுதி இலக்கு. இதனால் இஸ்­ரே­லுக்கு மேலா­திக்கம் செலுத்த முடியும்.

சற்று நிதா­ணித்து நின்று திரும்பிப் பாருங்கள். சிரியா கலைந்து போய் விட்­டது. ஈராக் சிதைந்து விட்­டது. யேமன் சீர் குலைந்துவிட்­டது. காஸா முற்­று­கை­யி­டப்­பட்­டுள்­ளது, லெப­னானில் இரத்தம் வழிந்தோடுகிறது. இவை எல்­லாமே ‘யினான்’ (Yinon Plan)  வரை­ப­டத்தின் வெற்­றி­க­ர­மான நிகழ்­கால அமு­லாக்­க­மாக மாறி­யுள்­ளன.

இந்த விரி­வாக்­க­வாத, மேலா­திக்­க­வாத திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வதில் அரபு ஆட்­சிகள் பெரும் பொறுப்பைக் கொண்­டுள்­ளன.

கேம்ப் டேவிட், ஒஸ்லோ உடன்­ப­டிக்­கைகள், வாடி அராபா மற்றும் ஆபி­ரகாம் உடன்­ப­டிக்­கைகள் மூலம் பத்­தாண்­டு­க­ளுக்குப் பிறகு சமா­தானம், பாது­காப்பைக் கொண்டு வரும் என்ற மாயையின் கீழ் அவர்கள் கண்­ணி­யத்தைக் கைவிட்­டனர்.

பதவி நீக்கம் செய்­யப்­பட்ட எகிப்­திய ஜனா­தி­பதி ஹோஸ்னி முபா­ரக்கின் கூற்று இங்கு நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. “அமெ­ரிக்­காவால் பாது­காக்­கப்­பட்­ட­வர்கள் இப்­போது நிர்­வா­ண­மாக விடப்­ப­டு­கின்­றார்கள்” என்று அவர் கூறினார்.

இந்த ‘யினான் திட்டம்’ ஓடெட் யினான் என்­ப­வரால் எழு­தப்­பட்டு மறைந்த இஸ்­ரே­லிய பேரா­சி­ரியர் இஸ்ரேல் ஷாஹாக் என்­ப­வரால் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு கிவுனிம் இதழில் வெளி­யி­டப்­பட்­டது.

அரபு நாடுகள் இஸ்ரேல் மீது போரை அறி­விக்கும் என்று யாரும் எதிர்­பார்க்­க­வில்லை. ஆனால், அவர்கள் குறைந்­த­பட்சம் பொரு­ளா­தாரத் தடைகள், புறக்­க­ணிப்­புகள், வான்­வெ­ளி­களை மூடுதல் மற்றும் வர்த்­தக முடக்­கங்­க­ளையும் விதிக்க முடியும். அத்­தோடு அவர்கள் பலஸ்­தீன ஆத­ரவு போராட்­டக்­கா­ரர்­களை சிறையில் அடைத்து, ஆர்ப்­பாட்­டங்­களைத் தடை­செய்து, பலஸ்­தீ­னத்­து­ட­னான ஒற்­று­மையை தொடர்ந்து அமை­திப்­ப­டுத்­து­வார்கள்.

இருப்­பினும், மக்கள் மத்­தியில் நிலவும் மௌனம் என்­றென்றும் நீடிக்­காது. அரபு மக்கள் பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

பலஸ்­தீ­னர்கள் குண்­டுகள் மற்றும் பஞ்­சத்தை தாங்­கு­வதை அவர்கள் காணு­கின்­றார்கள். மேலும், லண்­டனில் இருந்து கேப் டவுன், ஜகார்த்தா முதல் நியூயோர்க் வரை உலகளாவிய ஒற்றுமை எழுகின்றது.

அவற்றை அவர்கள் கூர்மையாக அவதானிக்கின்றார்கள். தங்கள் ஆட்சியாளர்கள் ஏன் எதுவும் செய்யவில்லை என்று அவர்கள் தம் மத்தியில் கேள்வி கேட்கின்றார்கள்.

இத்தகைய உத்வேகம் விரைவில் தெருக்களிலும், கடல்களிலும், வானத்திலும் ஊடுருவிச் செல்லலாம். ஒரு பாசிசவாத, விரிவாக்கவாத இஸ்ரேலுடன் இயல்பாக்கம் செய்வது அவர்களைக் காப்பாற்றும் என்ற மாயையை கைவிட்டு விட்டு, அதற்கு பதிலாக நட்பு நாடுகளுடன் கூட்டுப் பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதை, தெரிவு செய்ய அரபு ஆட்சியாளர்களுக்கு இன்னமும் கால அவகாசம் உள்ளது.

அரபு நாடுகள் ஈரான் அல்லது வேறு யாரையும் அல்ல, இஸ்ரேலை- தங்கள் உயிர்வாழ்வுக்கான முக்கிய அச்சுறுத்தலாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அவர்கள் வெளிப்படையில் அவமானமானத்துக்கு உரியவர்களாகவே இருப்பார்கள்.

-லத்தீப் பாரூக்-

Share.
Leave A Reply