பஸ்யால-கிரியுல்ல வீதியில் உந்துருளி மீது பாரவூர்தியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (23) பதிவாகியுள்ளது.

விபத்தில் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியொருவரே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply