முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கைது விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, உதய கம்மன்பிலவை செய்ய முடிவு எடுக்கப்பட்டால், அது குறித்து மனு மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.

உதய கம்மன்பில கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​குற்றப் புலனாய்வுத் துறை சார்பில் முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply