கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோயியல் பிரிவானது சுமார் இரண்டு வருடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (24.09.2025) வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பெண்நோயியல் பிரிவானது இரண்டு வருடங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இருப்பினும் பயன்பாடற்று மூடியிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரால் அதனை திறக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பில் நேற்றைய தினம் நாடாளுமன்றத்திலும் கருத்து முன்வைக்கப்பட்டது.

இதன் பின்னணியிலேயே தற்போது குறித்த பெண்நோயியல் பிரிவானது திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply