நவராத்திரி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இறைச்சி, மீன், முட்டை என்பனவற்றை விற்பனை செய்வதற்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டோபர் 2ஆம் திகதி வரை இறைச்சி, மீன், முட்டை விற்கத் தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேவேளை அரியானா மாநிலம் குருகிராமிலும் இதே போன்ற தடையை விதிக்க வேண்டும் என அப்பகுதியின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது