மேல்சிறிபுரவில் உள்ள பன்சியகம, நா உயன ஆரண்ய சேனசனா விகாரையில், கம்பித் தடத்தில் இயங்கும் வண்டி (cable-track operated cart) விபத்துக்குள்ளானதில், இந்தியா, ருமேனியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா ஒரு பௌத்த பிக்கு உட்பட ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் ஆறு பிக்குகள் காயமடைந்துள்ளனர்.

மேல்சிறிபுர, பன்சியகம, நா உயன ஆரண்ய சேனசனா விகாரை. இந்த விகாரையில் பிக்குகள் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் கம்பித் தடத்தில் இயங்கும் வண்டி, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழு பௌத்த பிக்குகள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒவ்வொரு பிக்கு அடங்குவர்.

ஆறு பிக்குகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான சரியான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply