திருமணமான தம்பதிக்கு இடையே உடலுறவு சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அதற்கு இருவருமே உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், பலரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பது கிடையாது, இதன் காரணமாக பலரும் ஆண் விறைப்புத்தன்மை, ஆண்மை குறைவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்பது குறித்து, டாக்டர் ஜோன்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஆண்கள் பெரும்பாலும் 2 வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள் ஒன்று உடலுறவு செய்யும் அளவுக்கு விறைப்புத்தன்மை இல்லாதது,
இன்னொன்று, விறைப்புத்தன்மை இருந்ததாலும், விந்து உடனடியாக வெளியேறிவிடுவது போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக 28-35 வயதுள்ள புதிதாக திருமணமாகவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
உடலில் சத்து குறைபாடு, உடலின் முக்கியமான பகுதி வலுவாக இல்லாமல் இருப்பது, மனதில் வேறு விதமாக சிந்தனைகள் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம். இந்த விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்குவதற்கு இடுப்புப் பகுதியின் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளைத் தவறாமல் செய்ய வேண்டும்.
தினமும் அரை மணிநேரம் தவறாமல் நடப்பது இந்தத் தசைகளுக்கு மிகச் சிறந்த ஆதரவை அளிக்கும். நீங்கள் ஜிம் செல்லும் பழக்கம் இருந்தால், கால்களுக்கானப் பயிற்சிகள், வயிற்றுக்கானப் பயிற்சிகள் போன்றவற்றைச் செய்வது நல்லது. உடல் மையத் தசைகளை வலுப்படுத்துவதன் மூலம், ஆணுறுப்புக்குப் பாயும் இரத்த ஓட்டம் மேம்படும்.
மேலும், ஆணுறுப்பின் தசைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆதரவுத் தசைகள் வலுப்பெற்று, நீண்ட நேர விறைப்புத்தன்மைக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
இந்த பிரச்னையை உணவின் மூலம் சரி செய்ய, வீட்டிலேயே தயாரித்து அருந்தக்கூடிய ஒரு அற்புதமான மருந்து உள்ளது.
அதுதான் முருங்கைப்பூப் பால். சீசனில் கிடைக்கும் முருங்கைப்பூக்களைச் சேகரித்து, நிழலில் நன்கு உலர்த்தி, மிக்ஸியில் லேசாக அரைத்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த முருங்கைப்பூப் பவுடரில் இருந்து ஒரு பெரிய டீஸ்பூன் அளவு எடுத்து, சுமார் 150 மி.லி. சூடான பாலில் கலந்து, அல்லது இரண்டு நிமிடங்கள் பாலைக் கொதிக்க வைத்து வடிகட்டி, உடலுறவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகக் குடித்து வரலாம்.
Advertisements
இது விறைப்புத்தன்மையை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், விறைப்புத்தன்மையின் நீடித்த நிலைத்தன்மைக்கும் (Long-term Longevity) உதவுகிறது. முருங்கைப்பூப் பவுடர் தயாரிப்பது சிரமமாக இருந்தால், சித்த மருந்துக் கடைகளிலோ அல்லது சித்த மருத்துவர் ஆலோசனையின் பேரிலோ கிடைக்கும் ‘முருங்கைப்பூ லேகியத்தை’ வாங்கிப் பயன்படுத்தலாம்.
இந்த லேகியத்தை ஆறு மாதங்கள் வரை கூட தினமும் காலை ஒரு ஸ்பூன், இரவு ஒரு ஸ்பூன் எனத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதுவும் உங்கள் விறைப்புத்தன்மையை மேம்படுத்த உதவும்.
விறைப்புத்தன்மை மற்றும் அதன் நீடித்த நிலைத்தன்மைக்கு நீங்கள் செய்ய வேண்டிய, ஆனால் பெரும்பாலும் தவிர்க்கப்படும் மூன்றாவது விஷயம், போதுமான உறக்கம்தான். தினமும் குறைந்தபட்சம் ஏழு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம்.
இது விறைப்புத்தன்மையின் நீண்ட கால நிலைத்தன்மைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.