மது போதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் நுவரெலியா கந்தப்பளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடபுஸ்சல்லாவையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதியை கைது செய்யும் போது, அவர் செலுத்திச்சென்ற பேருந்தில் சுமார் 30 பேர் பயணித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உடபுஸ்சல்லாவை பகுதியை சேர்ந்த 55 வயதான சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply