மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், இளையராஜாவுடன் இணைந்தும் ஹிட் கொடுத்துள்ளார்.

தனது மரணத்தை முன்பே கணித்த கண்ணதாசன், அதை வெளிப்படுத்தும் வகையில் தனது கடைசி பயணத்தின்போது வீட்டில் நடந்துகொண்ட விஷயங்கள் குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில், வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை தனது பாடல் வரிகள் மூலம் சொல்லிக்கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் கவியரசர் கண்ணதாசன்.

எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த் கமல்ஹாசன் என பலருக்கும் தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ள கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வைத்து எழுதியுள்ளார்.

அதேபோல் தனது பாடல்கள் மட்டுமல்லாமல், மற்ற கவிஞர்களின் பாடல்களையும் ரசிக்கும் மனம் கொண்ட கண்ணதாசன், வாலி எழுதிய ஒரு பாடலை கேட்டுவிட்டு அவரை பாராட்டி, நான் இறந்தால் நீதான் கவி பாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்படி கண்ணதாசன் இறந்த 3-வது நாள் அவருக்கான கவிஞர் வாலி கவிதை பாடியுள்ளார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், இளையராஜாவுடன் இணைந்தும் ஹிட் கொடுத்துள்ளார்.

பாடல்கள் மட்டும் இல்லாமல், இயக்கம், நடிப்பு, தாயரிப்பு, இலக்கியம் எழுதுவது என பன்முக திறமையுடன் வலம் வந்த கண்ணததாசன் குறும்புத்தனத்திற்கும் பெயர் பெற்றவர்.

இதற்கு ஒரு சம்பவமாக, தான் இறந்துவிட்டதாக தானே வதந்தியை பரப்பியுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி உடனடியாக கண்ணதாசன் வீட்டுக்கு விரைந்து வந்துள்ளார்.

ஆனால் வீட்டில் கண்ணதாசன் இருப்பதை பார்த்து அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார். அதற்கு கண்ணதாசன் எவ்வளவோ சொல்லியும், எம்.எஸ்.வி சில நிமிடங்கள் அழுதுள்ளார்.

அதேபோல் எப்போதும் வீட்டில் இருந்து கிளம்பும்போது பேசிக்கொண்டே காரில் ஏறி கிளம்பிவிடும் கண்ணதாசன்,

அமெரிக்க பயணம் செல்லும்போது, காரில் ஏறும் முன், தனது வீடு மனைவி என அனைவரையும் ஒருமுறை பார்த்துள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை.

அமெரிக்காவில் மரணமடைந்த கண்ணதாசன், உடலாகத்தான் திரும்பி இந்தியாவிற்கு வந்தார். அப்போது கண்ணதாசனின் மனைவி அவர் எப்போதுமே, வீட்டை பார்க்கவே மாட்டார்.

வெளியில் சென்றால் காரில் ஏறி சென்றுவிடுவார். ஆனால் அமெரிக்கா செல்லும் முன், வீட்டை ஒருமுறை பார்த்தார். அப்போவே எனக்கு சரியாக படவில்லை என்று இப்போதும் பேசி வருவதாக அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply