சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஏ-09 வீதியில் 304வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில், இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இரு மோட்டார் சைக்கில் ஓட்டுனர்களும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி அதில் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் மீசாலை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் சாவகச்சேரி  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரியபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply