கண்டி நோக்கிச் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு மோதியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (25) காலை பதிவாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்து தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பலகொல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தெல்தெனிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.