சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மற்றும் பல்வேறு வகையான விவசாய இரசாயனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துங்கல்டிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  பொலிஸ் நிலைய அதிகாரிகளால், வியாழக்கிழமை(25) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, 835 கிலோ 800 கிராம் நிறையுடைய பீடி இலைகள் , 635 கிலோ 600 கிராம் நிறையுடைய பல்வேறு வகையான விவசாய இரசாயனங்கள் மற்றும் 03 படகு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துங்கல்டிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply