யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளில் பொருட்கள் திருடிய நபரொருவர் நேற்றையதினம் (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – சாய்பாவா ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்த நல்லூர் பகுதியைச் சேர்ந்த யுவதியின் மோட்டார் சைக்கிளில் இந்த சூட்சுமமான திருட்டு பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணைகளை சிசிரிவி காணொளியை வைத்து ஆரம்பித்திருந்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர் நுணாவில் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply