திருநெல்வேலி வர்த்தக நிலையம் ஒன்றினை உடைத்து பொருட்களை திருடிய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் அண்மையில் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.
அதிலுள்ள பொருட்களை திருடிய 19, 27, 30 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்கள் நால்வர் நேற்றைய தினம் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையமானது கடந்த 24ஆம் திகதி இரவு உடைக்கப்பட்டு 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் வர்த்தக நிலைய உரிமையாளர் இது குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
அதனடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்த கோப்பாய் பொலிஸார் திருடப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.