கொழும்பில் வெவ்வேறு பகுதிகளில் இரு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு உடல் கிராண்ட்பாஸ் பகுதியிலும் மற்றொரு உடல் தெஹிவளையிலும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (29) மாலை கிராண்ட்பாஸின் இங்குருகொட சந்தியில் முதல் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண் என்றும் , எனினும் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை.

சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை பிணவறையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம் தெஹிவளை,சிறிவர்தன வீதியில் உள்ள வீடொன்றில் மற்றுமொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 23 வயது இளைஞன் எனத் தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலை பிணவறையில் இளைஞனின் உடல் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply