மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கம் தனியார் தோட்டத்தில் நேற்று (29) மாலை 15 வயது பாடசாலை மாணவன் தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரவு 7 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிய அவரது தந்தை, தனது மகனை காணாமல் தேடியுள்ளதுடன் சமையலறைக்கு அருகில் உள்ள அறையில் தனது மகன் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதை கண்டுள்ளார்.

மாணவனின் தாய் கொழும்பு சென்று உள்ளதாகவும் மாணவனுக்கு ஒரு அண்ணனும் நான்கு சகோதரர்களும் உள்ளனர் அவர், வீட்டில் கடைசி பிள்ளை என்று அவரது தந்தை  தெரிவித்துள்ளார்.

மரண விசாரணையின் பின்னர் உடல் கூற்று பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply