அதேநேரம், பாலஸ்தீன போராளிகள் அதை ஏற்கத் தவறினால் ஹமாஸூக்கு எதிரான வேலையை முடிப்பேன் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையைச் செய்ததாக ஐ.நா.புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்ச திட்டத்தின் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்திய வகையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட திட்டம் குறித்து ஹமாஸ் இன்னும் தனது தீர்ப்பை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் போர் நிறுத்தம், 72 மணி நேரத்திற்குள் ஹமாஸால் பணயக்கைதிகளை விடுவித்தல், ஹமாஸை நிராயுத பாணியாக்குதல் மற்றும் காசாவிலிருந்து படிப்படியாக இஸ்ரேல் வெளியேறுதல், அதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான போருக்குப் பிந்தைய இடைக்கால அதிகாரம் ஆகியவற்றைக் கோருவதாக அமைந்துள்ளது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உங்கள் திட்டத்தை நான் ஆதரிக்கிறேன், என நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
“மிஸ்டர் ஜனாதிபதி, ஹமாஸ் உங்கள் திட்டத்தை நிராகரித்தால் அல்லது அவர்கள் அதை ஏற்றுக்கொண்டதாகக் கூறி, பின்னர் அதை எதிர்க்க எல்லாவற்றையும் செய்தால், இஸ்ரேல் தானாகவே வேலையை முடிக்கும்.”
ஹமாஸ் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால், இஸ்ரேலுக்கு தனது “முழு ஆதரவு” இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப தெரிவித்துள்ளார்.