மாத்தறையில் 2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
26 வயதுடைய பெண்ணும் 2 1/2 மாதக் குழந்தையும் நேற்று கந்தர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாத்தறை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் சமீர மீகந்தவத்த, நீண்ட வாதங்களை முன்வைத்தார். இளம் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அது குழந்தைக்கு அநீதியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பிணை வழங்க மறுத்த மாத்தறை தலைமை நீதவான் சதுர திசாநாயக்க மறுத்துள்ளதுடன் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.