மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் முச்சக்கர வண்டிகளின் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்,இதற்காக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி,  முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் https://wptaxi.net/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.

முச்சக்கர வண்டிகளுக்கான பயணிகள் அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் செயல்பாட்டு   முகாமையாளர் ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்தார்.

இந்தப் பதிவு செயல்முறை முழுமையாக இணையவழி மூலம் நடைபெறுவதால்,முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இணையத்தளத்தில் தங்கள் விபரங்களைச் சமர்ப்பித்து, பதிவுக்கான நேரத்தைப் பெறலாம். இந்த நேரத்திற்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அலுவலகங்களில் பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply