நவகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 04 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவன் நவகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற உலக சிறுவர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் இந்த சிறுவன் வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்று பக்கம் சென்றுள்ளார்.
இதன்போது சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.