யாழ். நகர் பகுதியில் நேற்று மாலை 5.40 மணியளவில் வன்முறை குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதுடன் இதன்போது தாக்குதல்களும் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை நடாத்தியவர்கள் யார்? தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற விடயங்கள் வெளியாகவில்லை.

பொது இடத்தில் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டதால் மக்கள் அச்சத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்து, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply