கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஹுது மாவத்தையிலுள்ள ராமகிருஷ்ணா மிஷனுக்கு அருகில் ரயிலிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெலியத்தவிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் செல்லும் ரயிலில் இருந்து நேற்று (01) வீழ்ந்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது

இந்த சம்பவத்தில், பிலியந்தலையைச் சேர்ந்த 66 வயதுடையவரே உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

Share.
Leave A Reply