பொலிஸ் சேவையில் கடமையாற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 14 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கமைய பொலிஸ் சேவையில் கடமையாற்றி வரும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 14 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிட மாற்றம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.என். டி. சொய்சா நலன்புரி சேவைகளுக்குப் பொறுப்பான மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராகவும், பிரதி பொலிஸ்மா அதிபர் கே.டி.ஜி.எல்.ஏ. தர்மசேன நீர்கொழும்பு வலயத்திலிருந்து போதைப்பொருள் பிரிவு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராகவும், மேல் மாகாண போக்குவரத்து பிரிவு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரான டபிள்யூ.பி.ஜே. சேனாதீர அப்பதவிக்கு மேலதிகமாக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.டி . விஜேசேக்கர வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து மேல் மாகாண (தெற்கு) மாவட்டத்துக்குப் பொறுப்பான பதில் பொலிஸ்மா அதிபராகவும் , பதில் பொலிஸ்மா அதிபர் ஜே.எ.கே. ஜயசிங்க சட்டப்பிரிவு மாவட்டத்துக்கு பொறுப்பான பதில் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து மேல் மாகாண (வடக்கு) மாவடத்துக்குப் பொறுப்பான பதில் பொலிஸ்மா அதிபராகவும், பதில் பொலிஸ்மா அதிபர் ஓ. ஹேவாவிதாரண போதைப்பொருள் பிரிவு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து கேகாலை மாவட்டத்துக்குப் பொறுப்பான பதில் பொலிஸ்மா அதிபராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு மாவட்டத்துக்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபர் ஏ.ஐ. ஹபுகோட அப்பதவியிலிருந்து வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராகவும், இரத்தினபுரி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டி.எம்.எம்.ஏ.பி. மஹகிரில்ல அப்பதவியிலிருந்து தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளராகவும், தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.ஜே.என். சேனாரத்ன சட்டப்பிரிவு மாவட்டத்துக்கு பொறுப்பான பதில் பொலிஸ்மா அதிபராகவும், நிகவெரட்டிய வலயத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.டி. கினிகே மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராகவும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நுவரெலியா மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரான டபிள்யூ.எஸ்.பி.த சில்வா மேம்பாட்டு பிரிவு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராகவும், நிகழ்நெருக்க கண்காணிப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிதரி பொலிஸ்மா அதிபர் கே.ஏ.ஜே. கொடித்துவக்கு மத்திய குற்ற விசேட பணியகத்தின் மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ்மா அதிபராகவும், பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.ஏ.டி. குமாரி மகளிர் பொலிஸ் படையணி தலைமையகத்திலிருந்து சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் நலன்புரி சேவைகளுக்குப் பொறுப்பான மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராகவும் , சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.ஏ.ஆர். ஜெயசுந்தர இரத்தினபுரி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.