மகாத்மா காந்தியின் 156 ஆவது ஜனன தினத்தை நினைவுகூரும் வகையில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் ஒக்டோபர் 2 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நினைவேந்தலின் ஓர் அங்கமாக, மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை மற்றும் மனிதநேயம் ஆகிய நீடித்த மரபுகளுக்குக் கௌரவம் செலுத்தும் வகையில், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலய உத்தியோகத்தர்களும், பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். இது இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தையும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவினையும் பிரதிபலிக்கின்றது.

 

Share.
Leave A Reply