ஹிங்குரக்கொடை வராஹேன பகுதியில் உள்ள விவசாயி ஒருவர், நேற்று (03) மதியம் தனது நெல் வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர், ஹிங்குரக்கொடை போகஸ் சந்தி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

வரும் போகத்திற்காக நெல் விதைக்க வயலைத் தயார் செய்யும் நோக்கில், அறுவடை செய்த பின்னர் மீதமுள்ள வைக்கோலுக்கு தீ வைத்தார். இந்நிலையில், வெப்பமான வானிலை மற்றும் காற்று வீச்சால் தீ பரவி, அவர் அதில் சிக்கியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக ஹிங்குரக்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply