மொனராகலை, பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவாம்ப தல்கஸ் சந்தி மீகஹமுரே தோட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவர், 10 வயதுடைய தனது மகளை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை (03) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்களின் சொந்த ஊர் பிபிலவின் பதுளை கிராமம் எனவும் தற்போது குருவாம்ப தல்கஸ் சந்தி மீகஹமுரே தோட்ட பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவருகிறது.

சிறுமி தனது மூத்த சகோதரன் மற்றும் தந்தையுடன் ஒரே அறையில் ஒரே கட்டிலில் தூங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பல நாட்கள், சிறுமி தூங்கிக் கொண்டிருந்த போது அவளுடைய தந்தை அவளை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுமியின் பிறப்புறுப்பு பகுதி கடுமையான வலி மற்றும் காயங்களுக்குள்ளான நிலையில் அவர் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இவ் விடயம் தொடர்பாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான 38 வயதுடைய சமையல்காரரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply