கிளிநொச்சி பூநகரி பகுதியில் அரச காணிகளை மோசடியாக விற்பனை செய்துவந்திருந்த நிலையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு உரித்தான நிலத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கோப் குழுவில் வெளிக்கொணரப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமாக தற்போது தினேகா ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

ஏற்கனவே பளைப்பகுதியின் கரந்தாய் பகுதியில் மகிந்த ஆதரவாளர்களிற்கு காணிகள் ஒதுக்கி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பூநகரி கௌதாரிமுனையில் பல கோடி பெறுமதியில் தனியாருக்கு காணிகளை விற்றுவந்த நிலையில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply