கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுசாமிபுரம், தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்த லைட் ஹவுஸ் பகுதி ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “போலீசாருக்கு நன்றி சொல்ல வேண்டிய நேரத்தில் குற்றம் சொல்லாதீர்கள்” என்றார்.
“இந்த சம்பவத்தை தலைமை பண்புடன் கையாண்ட முதலமைச்சருக்கு நன்றி” எனவும் கூறினார்.
அப்போது லைட் ஹவுஸ் பகுதியில் அனுமதி கொடுத்திருந்தால் சரியாக இருந்திருக்குமா என செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, “மரணத்திற்கு எந்த இடமும் சரியானது கிடையாது” என பதில் அளித்தார்.
பாதுகாப்பு குறைபாடு காரணமா என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “இதை பாதுகாப்பு குறைபாடு என்று யார் கூறுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் எந்த பக்கமும் சாயாதீர்கள். நடுவில் நில்லுங்கள். அப்படி சாய்ந்தால் மக்கள் பக்கம் சாயுங்கள்.” என்றார்.
மேலும் விஜய்க்கு உங்களின் அறிவுரை என்ன என செய்தியாளர் கேட்ட போது, “அதை நீதிமன்றத்தில் சொல்வார்கள்” என பதிலளித்தார்