வாங்கிய பொருளுக்கு பணம் கேட்ட வர்த்தகரை மதுபோதையில் சென்றவர்கள் கத்தியால் குத்தியதில் உயிரிழந்துள்ளார்.
ஏழாலை கிழக்கை -சேர்ந்த சிங்காரவேல் தனவன் (வயது-35) என்ற வர்த்தகரே உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவ தாவது, ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு நேற்று முன்தினம் இரவு நிறை போதையில் இருவர் சென்றுள்ளனர்.
சென்றவர்கள் வர்த்தகரிடம் மிக்ஸர் வாங்கியுள்ளனர். மிக்ஸரை வழங்கிய வர்த்தகர் உரியவர் களிடம் பணத்தினை கேட் டுள்ளார்.
பணத்தை கொடுக்க மறுத்து வர்த்தகருடன் முரண் பட்டவர்கள் தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை திடீ ரென எடுத்து உரிமையாளர் மீது சரமாரியாக குத்தி தாக்கு தல் நடத்தியுள்ளனர்.
இதன் போது படுகாயமடைந்த உரிமையாளர் கீழே விழுந் துள்ளார். தாக்குதலை மேற் கொண்ட இருவரும் அங்கி ருந்து தப்பி சென்றுள்ளனர்.
படுகாயங்களுடன் இருந்த வர்த்தகரை அயலவர்கள் மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.