கண்டி, கம்பளை, தொலுவ பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந் துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயமடைந் துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று திங்கள்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நான்கு பெண்களும் சமய வழிபாடு நிகழ்வு ஒன்றுக்கு செல்வதாக வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு பெண் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ளதாக பொலி ஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் கம்பளை பொலிஸார் விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.