போரின் இறுதி நாட் ளில் மஹிந்த ராஜபக்சவி னால் வழங்கப்பட்ட போர் நிறுத்த உத்தரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்ல
வைக்கும் நோக்கமாக கொண்டது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் இவ் வாறு தெரிவித்த அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில்:- ராஜபக்சவின் போர் நிறுத்த அறி விப்பு முடிவு, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்ல அனுமதிக்கும் நோக் கம் கொண்டது.
போரின் இறுதி நாட்களில் போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்டதற் கான காரணத்தை மஹிந்த ராஜபக்ச விளக்க வேண்டும்.
இது வேறு ஏதாவது நாடாக இருந்திருந்தால், இந்த துரோகச் செயலுக்காக மஹிந்த ராஜபக்ஷவை தலைகீழாக தொங் கவிட்டு கொன்றிருப்பார்.
நமது அரசயலமைப்பின் படியும், அவருக்குத் தகுதியான தண்டனை தூக்கு தண்ட னைதான். அது அவருக்க வழங்கப் பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை என் றாலும், ராஜபக்ச நாட்டை காட்டிக் கொடுத்ததற்கு நீதி கிடைக்க வேண் டும்.
துறைமுகங்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், போதைப்பொருள் மாபியா, ஆயுத இறக்குமதி, சுங்கம், உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு மஹிந்தவின் ஆட்சியில் ஊக்குவிக் கப்பட்டது.
நாங்கள் போரை நடத்தினாலும் பிரபாகரன் எங்கள் குடும்பங்களைத் தாக்க முயற்சிக்கவில்லை. ஆனால் ராஜபக்சேக்கள் அப்படி இல்லை.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து உயர் மட்ட விசாரணைகள் நடத்தப் பட வேண்டும். இதனை இந்த அர சாங்கம் செய்ய வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச ஏன் நாட்டைக் காட்டிக் கொடுத்தார் என்பதைத் தீர்மானிக்க, மிக உயர்ந்த மட்ட விசாரணை அல் லது ஒரு ஜனாதிபதி ஆணையத்தை கூட தொடங்க வேண்டிய கடமை இந்த அரசாங்கத்திற்கு உள்ளது என் றார்.