கடமை நேரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து 150 மில்லி கிராம் எடையுடைய ஐந்து போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று இரவு ஆறு மணி முதல் இன்று காலை 6 மணி வரை கடமையில் அமர்த்தப்பட்டு இருந்தார் எனவும் அவர் பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி பிரிவில் கடமையில் அமர்த்தப்பட்டு இருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உரிய நேரத்தில் கடமைக்கு சமூகமளிக்காத பொலிஸ் உத்தியோகத்தர் இரவு 11 மணி அளவில் பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரிடமிருந்து  இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply