குறட்டை பிரச்சினை, கக்கா பிரச்சினை என்று சாதாரணவற்றிற்கு கூட அடித்துக் கொள்கிறார்கள். போதாக்குறைக்கு திவாகர் ‘டாக்டரா, வெறும் பிஸியோவா?’ என்கிற ஆராய்ச்சி…
போட்டியாளர்கள்தான் பெருமளவு சுவாரசியமில்லை என்று பார்த்தால், வீட்டில் நடக்கும் சண்டைகளிலும் பெரிய சுவாரசியம் எதுவுமில்லை.
குறட்டை பிரச்னை, கக்கா பிரச்னை என்று சாதாரணவற்றிற்குக்கூட அடித்துக் கொள்கிறார்கள். போதாக்குறைக்கு திவாகர் ‘டாக்டரா, வெறும் பிஸியோவா?’ என்கிற மருத்துவ ஆராய்ச்சி உரையாடல் வேறு. அதுவும் அதிகாலை 3 மணிக்கு.
கலையரசன் அருள்வாக்கு சொல்லும் சாமியாராக இருந்தார் என்கிறார்கள். ஆனால் அவரையே ஏதாவது ஒரு சாமியாரிடம் அழைத்து மந்திரித்துவிட வேண்டும்போல. சூன்யம் வைத்தது போல் உட்கார்ந்திருக்கிறார். இந்த வரிசையில் அப்சரா, ஆதிரை, வியன்னா என்று ஒரு பெரிய லிஸ்ட்டே செட் பிராப்பர்ட்டிகள் மாதிரி வெறுமனே உலவுகிறார்கள்.
இவர்களை உசுப்பி விடுவதற்காக பிக் பாஸ் சில பட்டாசுகளை கொளுத்திப் போட்டிருக்கிறார். அது வெடிக்குமா?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 1
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 | 06-10-2025 Vijay Tv Show- Day 01