இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் குறித்து இன்று (8) பொது கூட்டத்தை நடத்தவுள்ளது.
“2025 ஆம் ஆண்டுக்கான 3வது மின் கட்டண திருத்தம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டம், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட கட்டண மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைச் சேகரிப்பதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.