“ஆப்கானிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவரை தலிபான் பாதுகாப்புப் படையினர் அன்புடன் வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சோதனைச் சாவடி ஒன்றில் வழக்கமான பாஸ்போர்ட் சோதனைக்காக அந்தப் பயணியை தலிபான் வீரர் ஒருவர் நிறுத்தி அடையாள அட்டையை கேட்டுள்ளார்.அவர் தன்னை இந்தியர் என்று கூறியவுடன், தாலிபான் வீரர் உடனடியாகச் சிரித்து, அவரை வரவேற்று, ஆவணங்களைச் சரிபார்க்காமல் செல்ல அனுமதித்தனர்.அந்த வீரர்,
இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சகோதரர்கள் போல என்று கூறியதுடன், இந்திய பயணியை தேநீர் அருந்த அழைத்தார். இதன்பின் அவர் தனது பயணத்தைத் தொடர அனுமதித்தனர்.

“ஆப்கானிஸ்தான் தனது உண்மையான நண்பர்களை இப்படித்தான் நடத்துகிறது\” என்ற தலைப்பில் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. “,

Share.
Leave A Reply