வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவு காரணமாக 16,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

மேலும், 59 மருத்துவமனைகளும், 308 பாடசாலைகளும் தேதம் அடைந்துள்ளன.

மின்தடை காரணமாக சுமார் 320,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு நடவடிக்கைகளுக்காக 8700 இராணுவர்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply