பூநகரி – சங்குப் பிட்டி பாலத்தின் கீழ் சடலமாக மீட்கப் பட்ட காரைநகர் குடும்பப்பெண்ணின் தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகள் கூரிய ஆயுதத்தால் குத்தப் பட்டு, முகத்தில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு கொலை செய்ததற் கான ஆதாரங்கள் உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியை சேர்ந்த 36 வய தான 2 பிள்ளைகளின் தாயா ரான பெண்ணொருவர், சங்குப்பிட்டி பாலத்தினடி யில் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவரது சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ்.போதனா வைத்தியசா லையில், சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகள் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு, முகத்தில் எரியக்கூடிய திர வம் ஊற்றப்பட்டு கொலை செய்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
மேலும் சடலத்தின் சில மாதிரிகள் மேலதிக பகுப் பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சடலம் உறவி னர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கணவன் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் மனைவி வீட்டை விட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகை அணிந்து சென்றுள்ளதாகவும் அவரது சடலத்தில் நகைகள் காணப் பட்டிருக்கவில்லை.
அவர் வீட்டை விட்டு புறப்பட்ட போது, தனது நண்பி யுடன் வீட்டு நிகழ்வு ஒன் றுக்காக வெளி மாவட்டம் செல்வதாக குறிப்பிட்டதா கவும் ஆனால் அவர் நண்பி களுடன் செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.