அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியைப் பார்த்து பேசிய வார்த்தைகள், எகிப்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் சலசலப்பையும், இணையத்தில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதையொட்டி, எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்ற இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய ட்ரம்ப்,

“நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்,” என்று தெரிவித்தார்.

மேலும், இதைத் தொடர்ந்து டிரம்ப் கிண்டலாக, “இதே வார்த்தையை நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும்” என்றும் கூறினார்.

ட்ரம்பின் இந்தப் பேச்சு, அரசியல் அரங்கில் ஒரு தலைவரை அவரது பணியின் அடிப்படையில் அல்லாமல், தோற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடுவதாகக் கூறி, சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த மாநாட்டில் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply