இந்த வாரத்தில் ‘பொம்மை டாஸ்க்’ மாதிரி ஒருவரையொருவர் முட்டித் தள்ளிக் கொண்டு ஓடும் முகமூடி டாஸ்க்கை பிக் பாஸ் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் போல. இந்தச் சுவரு இன்னமும் எத்தனை பேரை பலி வாங்கப் போகுதோ?!
‘வெறும் சத்தம் மட்டுமே போடற இடமா இந்த வீட்டை மாத்திடாதீங்க. ஆட்டத்தை சுவாரசியமாக்குங்க’ என்று விஜய் சேதுபதி சொல்லி விட்டுச் சென்றதால் போட்டியாளர்களிடம் சிறிது மாற்றம் தெரிகிறது. எதையோ முயல்கிறார்கள். ஆனால் அது சுவாரசியமாக இருக்கிறதா என்று பார்த்தால். இல்லை.
நாமினேஷன் பிராசஸின் போது, ஏறத்தாழ ஒட்டுமொத்த வீடே பாருவை நாமினேட் செய்தது ரணகளமான சம்பவம். விட்டிருந்தால் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து கூட ஆட்கள் வந்து நாமினேட் செய்திருப்பார்கள். பாருவின் இம்சைகளும் அலப்பறைகளும் அப்படியொரு ரகமாக இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 8
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 | 13-10-2025 Vijay Tv Show- Day 8