இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து ஹமாஸ் குழுவினர் சொந்த பாலஸ்தீன மக்களையே சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்ந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இறுதியாக அமைதி ஒப்பந்தம் எட்டியுள்ளது. அதை தொடர்ந்து ஹமாஸ் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல பாலஸ்தீன மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இஸ்ரேல் படைகள் காசாவில் இருந்து முழுவதுமாக வெளியேறியுள்ள நிலையில் ஹமாஸின் ஆதிக்கம் மீண்டும் காசாவில் தொடங்கியுள்ளது.

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட முதல் நாளே பொதுவெளியில் வைத்து 6 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகின்றது. போர் சமயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இதுபோல ஒற்றர்களாக செயல்பட்டதாக பல பாலஸ்தீனர்களை ஹமாஸ் கொல்லக்கூடும் என்ற அச்சம் பாலஸ்தீன மக்களிடையே ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Share.
Leave A Reply