பிபில பேருந்து நிலையத்தில் பகலில் பத்து வயது சிறுமியை குடிபோதையில் முத்தமிட்டதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஒரு பொலிஸ் சார்ஜன்ட், தலா மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நபர், மஹியங்கனை, ரிதிமாலியத்த, நாரங்கசிய, அத்தே கனுவவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஆவார், இவர் கண்டகெட்டிய காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 10 ஆம் திகதி பிபில பேருந்து நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் சிறுமியை முத்தமிட்டதாக கைதாகியிருந்தார்.

இவர் குடிபோதையில் நடந்து கொண்டதாகவும், பத்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு பிபில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், வழக்கு மேலும் விசாரணைக்காக ஒக்டோபர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பில் பிபில காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply