தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழிவாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிய தருணத்தில் குறிப்பாக மக்கள் எரிபொருளுக்கும் ஏனைய பொருட்களுக்கும் வரிசையில் காத்திருந்து பெரும் இன்னல்களை அனுபவித்த காலத்தில் இந்த நாட்டை பொறுப்பேற்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய குற்றத்திற்காக பழிவாங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தமது அரசாங்கம் டொலர்கள் இல்லாதிருந்த இந்த நாட்டில் டொலர் கையிருப்பை அதிகரித்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க பழிவாங்கப்பட்டதாகவும் அடுத்தபடியாக தம்மை பழிவாங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நீதிமன்றில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் நேற்றிரவு தமது வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தம்மை கைது செய்து தடுத்து வைக்கும் ஓர் முயற்சி முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண பொது மக்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று அவர்கள் வாழ்க்கை தரம் முன்னேறுவதற்கு நடவடிக்கை எடுத்த தம்மை தற்பொழுது தண்டிக்க முயற்சிக்கப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு இளைஞர்களை பணிக்கு அமர்த்தியமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு எனினும் நிதி மோசடி தொடர்பில் இவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை எனவும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே வெளிநாட்டுக்கு அனுப்பிய முறை தொடர்பான முறைகேடுகளின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பிரபல பெண் ஒருவர் தம்மை பழிவாங்க முயற்சிப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்நோக்க தயார் என மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply