முல்லைத்தீவு – குருந்தூர் மலையை சூழவுள்ள 4 இடங்களில் தொல்லியல் திணைக்களம் அறிவித்தல் பலகைகளை அமைத்திருக்கின்றது.
அந்த அறிவித் தல் பலகைகள் வழக்கம்போல் அந்தப்பகுதி “குருண்டி தொல்லியல் தளம்’ என அடையாளப்படுத்தப்பட் டுள்ளது.
குருந்தூர் மலையில் ‘குருக்கன பாசகா’ என்ற கோவில் கி.மு 103 -109ம் ஆண்டளவில் கட்டப்பட் டதாகவும், முதலாம் விஜயபாகு மன்னன் கி.பி 1055 1110ம் ஆண்டளவில் இந்தக் கோவிலுக்கு பல்வேறு உதவிகளை செய்ததாக மகாவம்சம் கூறுகிறது.
இப்படியெல்லாம் அந்த அறிவித்தல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, திட்டமிட்ட ஆக்கிரமிப்பு முயற்சிகளும், மத திணிப்பும் வடக்கு – கிழக்கு மாகா ணங்களில் இன்றளவும் தொடரும் நிலையில் அர சாங்கம் கடந்தகால ஆட்சியை ‘சாபம்’ என விழிப்பது வேடிக்கை.
குருந்தூர் மலையில் உண்மையில் ஒரு பௌத்த விகாரை இருந்தது என்றால், அதற்கான வரலாற்று ஆதாரங்கள் இருந்தன என்றால் வெளிப்படையாக முல்லைத்தீவு மாவட்ட மக்களுடனும் கலந்துரையாடி யாழ்.பல்கலைகழகத்தின் தொல்லியல் பிரிவையும் உள்ளடக்கியதாக, வெளிப்படையான ஒரு அகழ்வாய் நடவடிக்கையை செய்திருக்க முடியும்.
ஆனால் பொலி ஸார் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் அங்கு அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டன. நீதிமன்ற உத்தரவை மீறி பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் அவசர அடை ரமாக விகாரை கட்டப்பட்டது.
இப்போது கி.மு. 103109ம் ஆண்டளவில் அங்கே விகாரை கட்டப்பட்டதாகவும், மகாவம்சத்திற்கும் அதர் கும் தொடர்புள்ளதாகவும் கதை எழுதினால் எப்படி நம்ட வது?
குருந்தூர் மலையில் பழமையான சிவன் கோவி ஒன்று இருந்துள்ளது. பல தலைமுறைகளாக அதனை ஆதரித்த மக்கள் உல்லனர்.
குருந்தூர் மலை சூழலில் நாகர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றாதாரங்கள் உள்ளன. அதற்கும் மேல் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுத் தட கள் உள்ளன. குருந்துர் மலையில் மீட்கப்பட்ட எட்டுப் படை கொண்ட கல்த்தூண் யூப்த ஸ்தம்பம்’ அல்ல.
அது பல்லவர் கால கட்டிடக் கலை பாணியை கொண்ட தாரலிங்கம் என வரலாற்று ஆய்வாளர் கலா நிதி என்.கே.எஸ்.திருச்செல்வம் குறிப்பிடுகிறார்.
ஆக, இவைற்றையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டா குருத்தூரில் வரலாற்று ஆய்வு நடத்தப்பட்டது? அப்படி இல்லாமல், மீட்கப்படும் அத்தனையும் பௌத் விகாரைக்குரியவை என்றும், அது மாகாவம்சத்துடன் தொடர்புடையவை என்றும் குறிப்பிடுவது ஒருவகை வக்கிரமான மனோநிலையால் செய்யப்படும் புனைவு களே அல்லாமல் உண்மையான வரலாறு அல்ல.
இந்த மனோநிலைதான் இந்த நாட்டின் இனங்கள் துருவமயப்பட்டு நிற்பதற்கு காரணமாக மாறியுள்ளது. இந்த மனோநிலையை மாற்றாமல் இந்த நாட்டில் இன நல்லிணக்கம் என்பது ஒருபோதும் சாத்தியமாகாது என் பதை புரிந்துகொள்ளவேண்டும்.
மறுபக்கம், தமிழ் தரப்புகளின் மௌனம் ஆக்கிரமிப் பாளர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. காணிகள் அயகரிக்கப்படும்போதும், பௌத்த மயமாக்கலின் போதும், வரலாறு திரிபுபடுத்தப்படும்போதும் மௌனம் சாதிக்கும் தமிழ் தரப்புகள் தமிழ் மக்களின் வரமா?
சாபமா?

