பெங்களூர்: பெங்களூரில் தோல் மருத்துவராக மனைவியை டாக்டராக இருக்கும் அவரது கணவர் சிகிச்சை என்ற பெயரில் அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்து கொன்றுள்ளார்.

பிறகு தனது மனைவி இயற்கையான முறையில் உடல்நலக்குறைவால் இறந்ததாக கூறி நாடகமாடிய டாக்டர் கணவரை போலீசார் 6 மாதங்களுக்கு பிறகு அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூர் மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட அய்யப்பா லே-அவுட்டில் வசித்து வருபவர் மகேந்திரா.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் மணிப்பாலை சேர்ந்த இவர் டாக்டர் ஆவார். அறுவை சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கும் இவர் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

” இவருக்கு கடந்த 2024 மே 26ம் தேதி திருமணம் நடந்தது. மனைவி பெயர் கிருத்திகா. இவரும் தோல்நோய் சம்பந்தப்பட்ட டாக்டராக இருக்கிறார்.

திருமணமான புதிதில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினர். இதற்கிடையே தான் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி கிருத்திகா மர்மமான முறையில் இறந்தார்.

அவர் வீட்டில் உள்ள தனது அறையில் பேச்சு, மூச்சின்றி கிடந்தார். உடனடியாக குடும்பத்தினர் கிருத்திகாவை மீட்டு அருகே உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது கிருத்திகா ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து மகேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கூறினர்.

ஆனால் கிருத்திகாவின் சகோதரியான நிகிதா ரெட்டி விடவில்லை. அவரும் ரேடியோலாஜி டாக்டராக இருக்கும் நிலையில் கண்டிப்பாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வெளியாகிய நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு டாக்டர் மகேந்திரனை மாரத்தஹள்ளி போலீசார் நேற்று கைது செய்தனர்.

மனைவிக்கு அளவுக்கு அதிகமாக மயக்கமருந்து கொடுத்து கொலை செய்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.

கிருத்திகா அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். ஆனால் உடல்நல பிரச்சனையை மறைத்து திருமணம் செய்ததாக கூறி மகேந்திர ரெட்டி அவரை கொன்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு நீதிமன்றத்தில் மகேந்திர ரெட்டியை ஆஜர்ப்படுத்திய போலீசார் 9 நாள் காவலில் எடுத்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

‛‛கிருத்திகா தோல் மருத்துவ டாக்டராக இருக்கிறார். ஏப்ரல் 24ம் தேதி அவர் இறந்தார். அவர் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு இரைப்பை அழற்சி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது கணவர் மகேந்திர ரெட்டியும் டாக்டர் ஆவார். அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார். இதனால் அவர் ஜிஎஸ் சிகிச்சை அளித்தார்.

அப்போது IV மூலமாக மருந்து செலுத்தினார். ஏப்ரல் 23ம் தேதி மதிய வேலையில் கிருத்திகா அதிகமாக வலியை உணர்ந்துள்ளார்.

இதனால் அவர் IV சொட்டு மருந்து அகற்றலாமா? என்று வாட்ஸ்அப்பில் கணவர் மகேந்திர ரெட்டிக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மீண்டும் மருந்து வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனால் கிருத்திகா வலியால் துடித்து அதன்பிறகு தான் இறந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது தெரியவந்தது. தடயவியல் ஆய்வக அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி பார்க்கும்போது தடை செய்யப்பட்ட மயக்க மருந்து புரோபோஃபோல் செலுத்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

இதனால் 6 மாதங்கள் கழித்து மகேந்திர ரெட்டியை கைது செய்துள்ளோம். இயற்கைக்கு மாறான மரணம் என்று முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இப்போது இது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கிருத்திகாவின் தந்தை முனி ரெட்டி அளித்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி முனிரெட்டி கூறுகையில், ‛‛என் மகள் டாக்டர் கிருத்திகா அவரது கணவரையும், அவரது தொழிலையும் முழுமையாக நம்பினார்.

அவர் மீதான அன்பால் கண்மூடித்தணமான நம்பிக்கையை வைத்தார். ஆனால் அவளது கணவரோ தனது மருத்துவ அறிவை வைத்து அவள் உயிரை காப்பாற்றுவதற்கு பதில் கொன்றுவிட்டார்.

இதில் திட்டமிட்ட சதி உள்ளது. எங்களின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவளது இழப்பு வெறும் தனிப்பட்ட இழப்பு இல்லை. இந்த சமூகத்துக்கான இழப்பு” என்று கூறி கதறி அழுதார்.

Share.
Leave A Reply