குளம் பகுதியில் நேற்று அதி காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இருவருக்கிடையில் கசிப்பு வியாபாரம் தொடர்பான தக ராற்றினால் இந்த கொலை நடந்ததாக சந்தேகிக்கப்படு கிறது.
கொலையை செய்த தாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார் குறித்த பகுதியை சேர்ந்த கஜன் (வயது-24) என்பவரே வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப் பட்டவரும், சந்தேகநபரும் குற்றப் பின்னணியுடைய வர்கள். இச் சம்பவம் தொடர் பில் அக்கராயன் குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் ஏற்க னவே சட்டவிரோத. கசிப்பு உற்பத்தி விற்பனைகளை கட்டுப்படுத்துமாறு கோரி 65 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கையொப்ப மிட்ட மகஜர்களை கையளித்திருந்த போதும் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்க வில்லை என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ள னர்.

