கிளிநொச்சியை சேர்ந்த இளைஞனை ஐந்து நாட்களாகக் காணவில்லை என காணாமல்போன இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த 26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.

குறித்த இளைஞன் வெளிநாடு செல்லவிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் கடந்த 21 ஆம் திகதி அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இளைஞனை கண்டவர்கள் 0771861326 அல்லது 0774604937 என் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply