கனேமுல்லை சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்திக்கு, மதுகம வெலி பென்னேயில் இருந்து மித்தேனியவுக்கு தப்பிச்செல்ல மதுகம ஷான் என்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் பணம் செலவழித்துள்ளமை தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு, நேற்று (24) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலையானபோது, ​​.ந்த விடயம் தெரியவந்துள்ளது.

கனேமுல்லை கொலைச்சம்பவம் தொடர்பான முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,

​​இஷாரா செவ்வந்தி நீதிமன்றத்திலிருந்து மதுகம வெலி பென்னேக்கு தப்பிச்சென்றது மற்றும் அவர் வெலி பென்னேயில் இருந்து மாத்தறை, மித்தேனிய மற்றும் யாழ்ப்பாணத்திற்கு எவ்வாறு பயணித்தார் என்பது குறித்த மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, ​​கொழும்பு குற்றப்பிரிவு இந்த உண்மைகளை சமர்ப்பித்துள்ளது.

அரச ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள், பாதாள உலக உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் கொலைக்குற்ற சந்தேகநபர்கள் இதற்கு ஆதரவளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் ஜூம் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, கனேமுல்லை சஞ்சீவ கொலை மற்றும் இஷாரா செவ்வந்திக்கு உதவிய வழக்கில் இருபத்தேழு சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply