பல்வேறு போட்டிகளில் இலங்கை இந்தியாவிற்கு கடும் சவால் விடுத்து வெற்றிகளை ஈட்டிக் கொண்டது.
இந்த போட்டி தொடரில் இலங்கை அணி 16 தங்கம் 14 வெள்ளி 10 வெண்கலம் உள்டங்களாக 40 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.
இதேவேளை, 20 தங்கம் 20 வெள்ளி 18 வெண்கலம் என்ற அடிப்படையில் இந்தியா முதல் இடத்தை பெற்றுக் கொண்டது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நான்கு தங்கப்பதக்கங்கள் மட்டுமே இடைவெளி காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை இந்தியா தவிர்ந்த வேறு எந்த ஒரு நாடும் இந்த போட்டி தொடரில் தங்கப்பதக்கம் வென்றெடுக்கவில்லை.
இந்த போட்டி தொடரில் இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர்.
இலங்கையின் சார்பில் சுமார் 60 வீர வீராங்கனைகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

