“கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்தும், கட்டித் தழுவியும், ஆடிப்பாடியும், கண்ணீரோடும் பிரிந்து செல்வார்கள்.
ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற் நுட்ப பல்கலைக் கழகமான ஐ.ஐ.டி. கான்பூரில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் வினோத நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
ஐ.ஐ.டி. கான்பூரின் முன்னாள் மாணவரும் சிம்பிளிபை தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான பி.கே.பிர்லா அப்படி ஒரு திருமணம் தொடங்கிய சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.
1994-ம் ஆண்டு குளிர் காலத்தில் கல்லூரியின் விடுதி அறையில் நண்பர்களோடு தூக்கம் வராமல் கதைகள் பேசிக்கொண்டி ருந்தோம்.
அப்போது சில நண்பர்கள் திருமணத்தின் கதையை சொல்லிக் கொண்டிருந்தனர். கல்லூரி ஆண்டு இறுதியில் இதுபோன்று ஒரு திருமணத்தை நடத்தினால் என்ன என்று யோசனை வந்தது.
நண்பரான நிர்மல் சிங் அரோரா அந்த திருமணத்தை ஏற்பாடு செய்தார்.அந்த திருமணத்திற்கு பெண்கள் முன்வராததால், மற்றொரு ஆண் நண்பர் பெண்வேடமிட்டு அதில் கலந்து கொண்டார்.
போலியான புரோகிதரையும் கூட்டி வந்து மணமக்களை குதிரையில் உட்காரவைத்து பெண்கள் விடுதி தோட்டத்தில் உள்ள பராத் ஹால் 1-ல் இருந்து ஹால் எண் 6 வரை அந்த ஊர்வலத்தை நடத்தினோம்.இ
து கல்லூரியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து வந்த மாணவர்கள் இதை நடத்தினார்கள்.
30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.கடந்த 2004-ம் அண்டு திருமணத்தில் பங்கேற்ற மாணவரான உத்கர்ஷ் தனது திருமண அனுப வத்தை பகிர்ந்து கொண்டார். அது ஒரு நல்ல மகிழ்ச்சியான அனுபவம். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஷாதி இப்போது பிரம்மாண்டமான பிரியாவிடை நிகழ்ச்சியாக மாறியுள்ளது. “,

