வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் துப்பாக்கி சூடு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உட்பட முக்கிய சந்தேகநபர்கள் அடங்கியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய காரணங்களையும், பின்னணியையும் கண்டறிய சிறப்பு விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

